கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில், ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டிகளுக்கான நடுவர்களாகச் செயற்படவுள்ள வளவாளர்களை உருவாக்கும் Training of Trainers (ToT) பயிற்சி செயலமர்வு நடைபெற்றது.
மகாஓயா, அம்பாறை, திருக்கோவில், அக்கரைப்பற்று, கல்முனை மற்றும் சம்மாந்துறை ஆகிய கல்வி வலயங்களைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட ஆங்கில மொழி ஆசிரியர்கள் இச்செயலமர்வில் பங்கேற்றனர். செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில், சம்மாந்துறை கல்வி வலயத்தின் ஆங்கிலப் பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் அப்துல் நஸீர் அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் என்.எம். மாலிக் அப்துல் அவர்களினால் ‘The Gold Standard in Competition Judging’ எனும் தலைப்பில் முக்கிய பயிற்சி அமர்வு நடத்தப்பட்டது. இவ்வமர்வில் போட்டிகளை மதிப்பீடு செய்யும் போது ஏற்படக்கூடிய உளவியல் சார்ந்த பல்வேறு பக்கச்சார்புகள் தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.


