TamilsGuide

ஈரானுக்கு எதிராக டிரம்ப் எடுக்கும் அதிரடி நடவடிக்கை

ஈரான் கடும் கோரிக்கைகளை விடுத்து வந்தாலும், அதற்கு எதிரான கூடுதல் ராணுவத் தாக்குதல்களுக்கு உத்தரவிடுவதைத் தவிர்த்துவிட்டு, பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கத் தயாராக இருப்பதாகத் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

ஈரானின் நடவடிக்கைகளை நாங்கள் சாதாரணமாகக் கையாளுகிறோம் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார். ஈரானில் நிலவும் கடுமையான பணவீக்கம் மற்றும் அவர்களிடம் பணம் இல்லாததை நாங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

போர் தொடங்கியதிலிருந்து ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளதால் எரிபொருள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து உலகப் பொருளாதாரத்தை உலுக்கியுள்ளது.

இருப்பினும், அமெரிக்க நுகர்வோர் இந்தப் போரினால் பெரியளவில் சிரமத்தை எதிர்நோக்கும் அளவிற்கு அமெரிக்கா எண்ணெய் விலைகளை உயர்த்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.  

Leave a comment

Comment