TamilsGuide

அருகே அருகே அவளும் வந்தாலே - ஐ எம் கேம் படத்தின் முதல் பாடல் வெளியீடு!

ஆர்டிஎக்ஸ் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான், கயாடு லோஹர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் ‘ஐ எம் கேம்’. இவர்களோடு மிஸ்கின், கதிர், வினய், சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் சாண்டி மாஸ்டர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

அதிர்ஷ்டத்தை அதிகம் நம்பும் ஒருவன் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை அடிப்படையாக கொண்டு படம் உருவாகியுள்ளது. படத்தை துல்கர் சல்மான், ஜாம் வர்கீஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

ஜேக்ஸ் பெஜாய் படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆக.20ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான அருகே அருகே வெளியாகி உள்ளது.

Leave a comment

Comment