TamilsGuide

மீண்டும் திரையில் த்ரிஷா - விஜய் ஜோடி - திருப்பாச்சி மறுவெளியீடு

பேரரசு இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பசுபதி, மல்லிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 2005ம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றப் படம் திருப்பாச்சி. தனது முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தார் இயக்குநர் பேரரசு.

விஜய் மற்றும் நடிகை த்ரிஷா கெரியரிலும் இது முக்கிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்நிலையில் இப்படம் அக்.1ம் தேதி மறுவெளியீடு செய்யப்பட்ட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. முன்னரே இதன் மறுவெளியீடு தொடர்பான தகவல்கள் வெளியான நிலையில், தற்போது வெளியீட்டு தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நடிகர் விஜய் மற்றும் த்ரிஷாவின் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். 
 

Leave a comment

Comment