TamilsGuide

வெலிகம மணல்கம கடலில் சர்ஃபிங் விளையாடிய துனிசிய சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கி உயிரிழப்பு

வெலிகம, மணல்கம கடற்கரைப் பகுதியில் ‘சர்ஃபிங்’ (Surfing) அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த துனிசிய நாட்டைச் சேர்ந்த 21 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவரது சடலம் இன்று (09) கரை ஒதுங்கியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துனிசியாவிலிருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று நேற்று (08) மணல்கம பகுதியிலுள்ள பழைய கடைக் கடற்கரையில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அப்போது கடலில் வீசிய பலத்த காற்று மற்றும் சீற்றமான அலை காரணமாகக் குறித்த வாலிபர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானார்.

அவரைக் கண்டுபிடிப்பதற்காகக் கடற்படை, பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு மற்றும் கடலோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் இணைந்து தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோதிலும் பலன் கிடைக்கவில்லை.

இந்நிலையில், காணாமல் போன சுற்றுலாப் பயணியின் சடலம் இன்று பழைய கடை கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment