• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிறைச்சாலை மோதல்கள் குறித்து ஆராயத் தொடர்புடைய தலைவர்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

இலங்கை

சிறைச்சாலை மோதல்கள் மற்றும் அங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலைகள் தொடர்பாக ஆராய்வதற்காகத் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. 

சிறைச்சாலை மோதல்கள் தொடர்பில் பேராசிரியர் ஞானசுந்தர வழங்கிய நிபுணத்துவ அறிக்கை குறித்து ஆலோசிக்கவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான முறையான செயல்திட்டத்தை வகுக்கும் நோக்கிலுமே இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், பொலிஸ் மா அதிபர் மற்றும் தொடர்புடைய அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இந்தச் சந்திப்பிற்கு அழைக்கப்படவுள்ளனர்.

இதேவேளை, சிறைச்சாலைகளில் காணப்படும் நெருக்கடி நிலைமைகளுக்கும் மோதல்களுக்கும் தீர்வு காண்பதில் அரசாங்கம் தொடர்ந்து தவறும் பட்சத்தில், இச்சம்பவங்கள் குறித்து ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடு செய்யப்படும் என மனித உரிமைகள் ஆர்வலர் நிமல் புஞ்சிஹேவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

Leave a Reply