TamilsGuide

மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருக்கும்போதே குழந்தை பெற்றெடுத்த பெண்

வைத்தியசாலைக்கு கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு வைத்தியசாலை வாசலிலேயே பெண் குழந்தையை பெற்றெடுத்து உள்ளார்.

வியட்நாம் நாட்டின் தாய் குவாங் மாகாணம் புலுவாங் பகுதி யில் உள்ள ஆவைத்தியசாலைக்கு அருகில் இந்த வியக்கத்தக்க சம்பவம் அரங்கேறியுள்ளது.

வியட்நாமை சேர்ந்த 25 வயதுடைய நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் திடீரென கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார்.

இதையடுத்து உடனடியாக அவரது கணவர் தனது மனைவியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அவசரமாக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

வைத்தியசாலையை அடைவதற்குள் வாசலிலேயே அந்த பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமாகி, மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையிலேயே அவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இதைக் கண்ட வைத்தியர்கள் உடனடியாக ஓடி வந்து தாயையும், குழந் தையையும் மீட்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் சென்றனர். இருவரும் தற்போது நல முடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பலரது நெகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் பெற்று வருகிறது.
 

Leave a comment

Comment