TamilsGuide

யாழ் பல்கலைக்கழக மாணவியின் மரணத்தால் கதறும் உறவுகள் - துயரை ஏற்படுத்திய காரணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தின் இசைத்துறை மாணவி ஒருவர் நேற்று முன்தினம் (06) இரவு உயிரிழந்துள்ளார்.

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:

குறித்த மாணவி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்தார்.

இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இம்மாணவி கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் அனைவர் மத்தியிலும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கற்ற சமூகத்தில் ஏற்படும் தொடர்ச்சியான இழப்புகள் ஈடு செய்ய முடியாத பாரிய இழப்புகளாகவே பார்க்கப்படுகின்றன.
 

Leave a comment

Comment