ஒருமுறை இரண்டு நாட்கள் பயணம் ஆக மதுரை சென்ற தலைவர் பாண்டியன் ஹோட்டலில் தங்குகிறார்.
ஹோட்டலை சுற்றி ஒரே பரபரப்பு..கூட்டம்.. அதே ஹோட்டலில் லிப்ட் பாய் ஆக வேலை செய்யும் ஒரு வாலிபருக்கு தலைவர் மீது மிகுந்த அன்பு பாசம் இருந்தது.
அவன் தன்னுடன் வேலை செய்யும் சக நண்பர்களுடன் தலைவர் பற்றி பெருமையா பேசுவது வழக்கம்...அவரே தன் கண் முன்னே அந்த ஹோட்டலில் தங்கி இருப்பது அவருக்கு மிக்க மகிழ்ச்சியை கொடுக்க..
அன்று இரவு வெளியில் சென்று வந்த தலைவர் ஹோட்டல் வந்து லிப்ட் வழியாக மேலே ஏற போகும் போது அந்த வாலிபன் தலைவர் அருகே ஓடி சென்று அண்ணா உங்களுடன் ஒரு போட்டோ எடுத்து கொள்ளவேண்டும் என்று சொல்ல சுற்றி இருந்தவர் தடுக்க தலைவர் அவனை ஒரு மாதிரி பார்த்து விட்டு பதில் ஏதும் சொல்லாமல் மேலே சென்றுவிட்டார்.
விடுதி மேலாளர் என்னடா இது இப்படி செய்துவிட்டாய் என்று கோவம் கொள்ள உடன் வேலை செய்தவர்கள் என்னப்பா உன் எம்ஜிஆர் பதில் கூட சொல்லாமல் போய் விட்டாரே என்று கேலி செய்ய அன்று இரவு முழுவதும் கண்ணீரில் குளித்தான் அந்த ரசிகன்..
மறுநாள் மதியம் சாப்பாடு வேளை முடிந்து தான் அங்கு இருந்து கிளம்பும் பயண ஏற்பாடுகளை தலைவர் செய்ய் மீண்டும் ஹோட்டல் பரபரப்பு கொண்டது.
தன் அறை பெல்லை அடித்து கீழே இருந்த மேலாளராக இருந்தவரை வர சொல்லி உங்கள் ஹோட்டலில் பணி புரியும் அனைத்து லிப்ட் பாய்கள் மற்றும் அறை சர்விஸ் பணியாளர்களை உடனே என் அறைக்கு வர சொல்லுங்கள் என்றவுடன் ஆடி போன அவர் அதன் படி செய்ய.
அனைவரும் மேலே வர நேற்று யார் என்னுடன் படம் எடுத்து கொள்ள வேண்டும் என்று உங்களில் கேட்டது என்று கேட்க தயங்கிய படி மேற்கண்ட வாலிபர் வர தலைவர் சிரித்து கொண்டே அவனை அருகில் அழைத்து அவன் தோள் மீது கையை போட்டு கொண்டு..... தயார் ஆக காத்து இருந்த புகைப்பட நிபுணரை அழைத்து தம்பி அவரை பார் சிரி அப்போதான் படம் நல்லா வரும் என்று சொல்ல அவனுக்கு எல்லை இல்லா மகிழ்வுடன் நான் எம்ஜிஆர் ரசிகன்டா என்ற திமிருடன் போஸ் கொடுத்து புகை படம் எடுத்து கொண்டான்.
அதன் பின் அங்கு அறையில் இருந்த மற்ற பணியாளர்கள் அனைவருடன் தலைவர் நடுவில் நின்று கேமரா பளிச் பளிச் என்று தன் கண்களை வெட்ட துவங்கியது..
அதோடு இல்லாமல் தன் ஜிப்பாவில் இருந்து ஒரு கட்டு பணம் எடுத்து அந்த வாலிபன் கையில் திணித்து அனைவரும் சமமாக பிரித்து எடுத்து கொள்ளுங்கள் என்று சொல்லி நான் புறப்படுகிறேன் வரவா என்று கேட்டார் எம்ஜிஆர்..
உங்களில் ஒருவன் நெல்லை மணி


