TamilsGuide

நடிகர் சங்க கட்டிடத்தை முதலமைச்சர் விஜய்தான் திறந்து வைப்பார் - விஷால்

சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தான் திறந்து வைப்பார் என்று நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசியுள்ள அவர்.,

“நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தை யாரோ திறந்து வைக்கப்போகிறார்கள் என்று நினைத்தோம். ஆனால், தற்போதைய முதலமைச்சரும், எங்கள் நடிகர் சங்கத்தின் முக்கிய உறுப்பினருமான விஜய் தான் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடத்தை திறந்து வைக்க உள்ளார். நான் அவரிடம் முன்னரே சொன்னேன். ” என தெரிவித்துள்ளார்.

கடந்த 2024ம் ஆண்டு நடிகர் விஜய் தனது சொந்தப் பணத்திலிருந்து இக்கட்டடப் பணிகளுக்காக ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியிருந்தார். நீண்ட சட்டப் போராட்டங்கள் மற்றும் நிதி நெருக்கடிகளுக்குப் பிறகு, தற்போது இக்கட்டடத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.

இக்கட்டடம் திறந்தபின்தான் தனது திருமணம் என நடிகர் விஷால் உறுதியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment