TamilsGuide

18 வயதில் உலகின் இளம் பேராசிரியர் - கின்​னஸ் புத்​தகத்​தில் நாதன் தாமஸ்

18 வயதில் உலகின் இளம் பேராசிரிய​ராக மாறி சாதனை படைத்​துள்​ளார் அமெரிக்​காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளில் இளைஞர் நாதன் தாமஸ் . அமெரிக்​கா​வின் புளோரி​டாவைச் சேர்ந்​தவர் நாதன் தாமஸ்.

இவர் 18 ஆண்டு 346 நாட்​களில் உலகின் மிக இளம்​வயது பேராசிரியர் என்ற சாதனையைப் படைத்து கின்​னஸ் புத்​தகத்​தில் இடம்​பெற்​றுள்​ளார். இதன் மூலம், 306 ஆண்​டு​ சாதனையை முறியடித்​துள்​ளார்.

இதற்​கு​முன், 1717-ம் ஆண்​டில் தனது 19-வது வயதில் பேராசிரியர் பதவி​யேற்று ஸ்காட்​லாந்து கணித​விய​லா​ளர் கோலின் மெக்லாரின் மிக இளம்​வயது பேராசிரியர் என்ற சாதனையை படைத்​திருந்​தார்.

2008-ம் ஆண்​டில் அலியா சபூர் என்ற பெண் 18 வயதிலேயே இளம் பேராசிரியர் என்ற சாதனையை படைத்திருந்தார். அவரை​விட 16 நாட்​கள் இளை​ய​வர் நாதன் தாமஸ். இதன்​மூலம் இரு​பாலரிலும் இவரே இளம் வயது பேராசிரியர் நாதன் தாமஸ், மியாமி டேட் கல்​லுாரி​யில் இன்​ஜினீயரிங் பாடங்​களை கற்​றுக்​கொடுக்​கும் பணி​யில் இணைந்​துள்​ளார்.

தனது 10 வயதிலேயே அக்​கல்​லூரி​யில் பள்​ளிப்​படிப்​புடன் சேர்த்து கல்​லூரிப் படிப்பையும் தொடங்​கி​விட்​டார் நாதன் தாமஸ்​. 14-வது வயதில் புளோரிடா சர்​வ​தேசப் பல்​கலைக்​கழகத்​தில் கல்​லூரி படிப்பை தொடங்கினார்.

மின் பொறி​யியல் துறை​யில் இளங்​கலை், முதுகலை பட்டங்களையும் 18 வயதுக்​குள் முடித்​தார். தற்​போது தான் படித்த கல்​லூரி​யிலேயே பேராசிரிய​ராக மாறி சாதனை படைத்​துள்​ளார். நாதன் தாமஸ் மியாமி பல்​கலைக்​கழக சட்​டப் பள்​ளி​யில் டாக்​டரேட் பட்டத்துக்கான ஆராய்ச்​சி படிப்​பை​யும்​ மேற்​கொண்​டு வருகிறார்.
 

Leave a comment

Comment