TamilsGuide

இனி சும்மா இருக்க மாட்டேன் - மிருனாள் தாகூர் கோபத்துடன் கடும் எச்சரிக்கை

நடிகை மிருனாள் தாகூர் ஆரம்பத்தில் படங்களில் ஹோம்லியாக மட்டும் நடித்து வந்தாலும் தற்போது தாராள கவர்ச்சியாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

மேலும் அவர் நிகழ்ச்சிகளுக்கு வரும்போது தாராள கவர்ச்சி உடையில் வந்து எல்லோரையும் ஈர்க்கிறார்.

அவரது கவர்ச்சி புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரல் ஆகிறது. அவரது நிஜமான புகைப்படங்கள் ஒரு பக்கம் என்றால், AI மூலம் உருவாக்கப்பட்ட சில மோசமான கவர்ச்சி புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆவதை பார்க்க முடிகிறது.

அது பற்றி கடும் கோபத்துடன் தற்போது மிருனாள் தாகூர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.

என் தோற்றத்தில் போலியான புகைப்படங்களை உருவாக்குவது அல்லது பகிர்வது சட்டவிரோதம் மற்றும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதை உடனே நிறுத்துங்கள். இதுதான் கடைசி எச்சரிக்கை.

என்னுடைய தோற்றத்தை தவறாக காட்டி போலியான புகைப்படங்கள் வெளியிட்டால் இனிமேல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என மிருனாள் தாகூர் கூறி இருக்கிறார்.

மேலும் இப்படி இணையத்தில் தவறான புகைப்படங்களை வெளியிடுபவர்களை டேக் செய்யுங்கள் என ட்விட்டரில் ஒரு பதிவை போட்டு இருக்கிறார் அவர். அப்படி செய்தால் அந்த மாதிரி கணக்குகளை எல்லாம் ஒரே இடத்தில் அடையாளம் காண முடியும் என்பதற்காக இப்படி செய்து இருக்கிறார். 
 

Leave a comment

Comment