TamilsGuide

விமான பணிப்பெண்ணை ஏமாற்றிய சாமிக்க கருணாரத்ன - மரபணு பரிசோதனை

இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னவிடம் மரபணு பரிசோதனைக்காக இரத்த மாதிரியைப் பெறுமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

விமான பணிப்பெண் ரசிகா செவ்வந்தி என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை ஒன்றின் போதே இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

தனது குழந்தையின் தந்தை சாமிக கருணாரத்ன எனக் குறிப்பிட்டுப் பிறப்புச் சான்றிதழை வழங்குமாறு பதிவாளர் நாயகத்துக்கு உத்தரவிடக்கோரி அவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

வழக்கை விசாரித்த கொழும்பு மாவட்ட நீதிபதி லலித் கன்னங்கர, சாமிக கருணாரத்னவிடம் கட்டாயப்படுத்தி இரத்த மாதிரி பெற போதுமான ஆதாரங்களை மனுதாரர் சமர்ப்பிக்கத் தவறிவிட்டதாகக் கூறி அந்த விண்ணப்பத்தை நிராகரித்தார்.

மரபணு பரிசோதனைக்கான கோரிக்கை விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்ட போதிலும், மேலதிக விசாரணைகளுக்காக வழக்கைப் எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

Leave a comment

Comment