மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு-கண்டி பிரதான வீதியின் கடுகன்னாவ – கனேதென்ன (Ganetenna) பகுதியானது, இன்று (04) காலை 6.00 மணி முதல் மீண்டும் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாகக் கீழ் கடுகன்னாவப் பகுதியில் பாறைகள் சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று (03) அப்பகுதியில் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டு வீதி மூடப்பட்டிருந்தது.
வானிலை சீரடைந்த பின்னரும், தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் (NBRO) பரிந்துரைகளின் அடிப்படையிலும் வீதியை மீண்டும் திறப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், இப்பகுதி வழியாகப் பயணிக்கும் வாகன சாரதிகள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


