ஸ்பெயின் எல்லைக்குள் நுழைய முயன்று உயிரிழந்த அகதிகள் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று முன் தினம் மொராக்கோவில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் கடல் வழியாக ஸ்பெயினின் சீயடா நகருக்குள் சட்டவிரோதமாக நுழைந்தனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொராக்கோ நாட்டினர் திடீரென ஸ்பெயினுக்குள் நுழைந்தனர்.
இந்த சம்பவம் ஐரோப்பாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தற்போது மொராக்கோ எல்லையோரக் கடற்கரையில் மேலும் 5 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.
ஸ்பெயினுக்குள் நுழைந்தவர்களை மீண்டும் மொராக்கோவுக்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது.


