TamilsGuide

இந்தியாவில் வசூல் வேட்டையாடி வரும் ஸ்பைடர் மேன் - 5 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

உலகளவில் கொண்டாடப்பட்டு வரும் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம் இந்தியாவில் 5 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

மார்வெல் தயாரிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு இருக்கும். அதிலும், அவென்ஜர்ஸ், ஸ்பைடர் மேன் திரைப்படங்களை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.

அப்படி, இந்திய ரசிகர்களால் தற்போது ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம் மாபெரும் அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆம், இப்படம் வெளியாகி 5 நாட்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை இந்திய பாக்ஸ் ஆபிஸில் இப்படம் ரூ. 335 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

இந்தியாவில் வெளிவரும் திரைப்படங்களுக்கே 5 நாட்களில் இவ்வளவு பெரிய வசூல் வரவேற்பு கிடைப்பது எளிதல்ல. ஆனால், அதனை ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம் அசால்ட்டாக செய்துள்ளது என்பது மாபெரும் விஷயம் தான். கண்டிப்பாக இந்தியாவில் மட்டுமே ரூ. 500 கோடியை இப்படம் தொடும் என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படமே இவ்வளவு பெரிய வசூல் சாதனையை இந்தியாவில் செய்துள்ளது என்றால், இந்த வருடத்தின் இறுதியில் வெளிவரவிருக்கும் அவென்ஜர்ஸ்: டூம்ஸ்டே திரைப்படம் எவ்வளவு சாதனை படைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Leave a comment

Comment