TamilsGuide

இலவச சுற்றுலா விசாவை அறிமுகம் செய்துள்ள வளைகுடா நாடு

இலவச சுற்றுலா விசாவை: வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமனில் புதிய விசா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஓமன் அரசு, சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய இலவச 14 நாள் சுற்றுலா விசா திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த மாற்றம், வெளிநாட்டவர் குடியிருப்பு சட்டத்தின் நிர்வாக விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டம் Royal Oman Police Decision No. 109/2026 மூலம் அறிவிக்கப்பட்டது. இதனை லெப்டினன்ட் ஜெனரல் ஹசன் பின் மொஹ்சின் அல் ஷ்ரைகி, பொலிஸ் மற்றும் சுங்கத் துறை பொது ஆய்வாளர், அதிகாரப்பூர்வ கசேட்டில் வெளியிட்ட மறுநாளே அமுல்படுத்தினார்.

இந்த விசா, தகுதியான நாடுகளின் குடிமக்களுக்கு வழங்கப்படும். விசா காலாவதியாகும் முன், பயணிகள் இதனை மற்ற சுற்றுலா விசா வகைகளாக மாற்றிக் கொள்ளலாம். அதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டணங்கள் தனித்தனியாக இருக்கும்.

புதிய விதிமுறைகளின் படி, இந்த விசா Article 10 மற்றும் Article 29-இல் சேர்க்கப்பட்டுள்ளது. இதில், கட்டணம் பூஜ்யம் (Zero Omani Rials) என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலவச விசா வழங்கப்படும் நாடுகளின் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. அதிகாரிகள், தகுதியான நாடுகளை விரைவில் அறிவிப்பார்கள் என தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை, ஓமனின் சுற்றுலா துறையை மேம்படுத்தும் பெரிய முயற்சியின் ஒரு பகுதியாகும்.

உலகளாவிய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க, ஓமன் தனது விசா நடைமுறைகளை எளிமைப்படுத்தி வருகிறது. இதற்கு முன், ஓமன் வசிப்புக் கட்டுப்பாடுகளை தளர்த்தி, ஸ்பான்சர் இல்லாத விசாக்களை வழங்கியிருந்தது. இப்போது, குறுகிய கால பயணிகளுக்கான இலவச 14 நாள் விசா, சுற்றுலா வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a comment

Comment