TamilsGuide

கஜினி படத்துல இருந்தே சூர்யா சார் மேல எனக்கு கிரஸ் - விஸ்வநாத் & சன்ஸ் இசை வெளியீட்டு விழாவில் மமிதா 

'கருப்பு' படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் 46வது படமாக ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படம் உருவாகியுள்ளது.

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கிய இப்படத்தில் ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா தாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் ஒரு நடுத்தர வயது விளையாட்டு வீரருக்கும், அவர் மீது ஈர்ப்பு கொள்ளும் இளம் பெண்ணுக்கும் இடையிலான காதலை மையமாகக் கொண்ட கதைக்களத்தை கொண்டுள்ளது என டிரெய்லர் மூலம் அறிய முடிகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள சூர்யா இன்று விமான மார்க்கமாக கோவை வந்தடைந்தார்.

இந்த விழாவில் படத்தின் நாயகி மமிதா பைஜூ, படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், நடிகர் சுனில், நடிகை ராதிகா, இயக்குநர் அட்லூரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய நடிகை மமிதா, சூர்யா மீது தனக்கு இருந்த கிரஷ்-ஐ தெரிவித்துள்ளார்.

மேடையில் மமிதா சூர்யா குறித்து பேசியதாவது, சூர்யா சாரை பார்த்து நிறைய கத்துருக்கேன்.

ஆஃப் ஸ்கிரின்ல இருந்தும் நிறைய இன்ஸ்பையர் பண்ணிருக்காரு. அவரோட சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு இதுக்கு முன்னாடி மிஸ் ஆகிடுச்சு. ஆனா இந்த முறை அந்த வாய்ப்பு அமைஞ்சுடுச்சு. கஜினி படத்துல இருந்தே சூர்யா சார் மேல எனக்கு க்ரஷ்.

அவரோட சேர்ந்து வொர்க் பண்ணது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அவரு ஒரு சீனை அப்ரோச் பண்ணுற விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

ஜிவி சார் கூட இரண்டாவது முறையாக வொர்க் பண்ணதுல ரொம்ப ஹாப்பி. ராதிகா மேம் செட்ல ஒரு மெண்டாராக எனக்கு இருந்தாங்க." என்றார்

‘விஸ்வநாத் & சன்ஸ்’ படம் ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாக உள்ளதை தொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

‘விஸ்வநாத் & சன்ஸ்’ படம் ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாக உள்ளதை தொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

நடிகர் சூர்யா பிறந்தநாளையொட்டி கடந்த வாரம் வெளியான இரண்டாவது பாடலும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள இப்பாடலை, நடிகர் சூர்யாவே தனது சொந்தக் குரலில் பாடியுள்ளார்.

மேலும் கென் கருணாஸ் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடல், ஒரு குடும்பத் திருமண விழாவின் கொண்டாட்டங்களை மையமாகக் கொண்டு துள்ளலான இசையுடன் பின்னப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment