TamilsGuide

சிறைச்சாலை அமைப்பின் பிரச்சினைகள் குறித்து நாமல் ராஜபக்ஷ கண்டனம்

இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலையில் ஏற்படும் மோதல்கள் குறித்து தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். 

அவர் தனது “X” கணக்கில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதன்படி, சில வார இடைவெளியில் இடம்பெற்ற இரண்டாவது பெரிய சிறைச்சாலை மோதல் இதுவென சுட்டிக்காட்டியுள்ள அவர், இது தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமல்ல என்றும், மோசமான நிர்வாகம், அலட்சியம் மற்றும் சீரழிந்து வரும் சிறைச்சாலை அமைப்பின் வெளிப்பாடு என்றும் விமர்சித்துள்ளார்.

”மற்றொரு சிறைச்சாலைக் கலவரம் நிகழ்ந்துள்ளது.

இவ்முறை எத்தனை உயிர்கள் பலியாகும் என்பதே கேள்வி.

சில வாரங்களுக்குள் ஒரு சிறைச்சாலையில் பதிவான இரண்டாவது பெரிய கலவரம் இதுவாகும்.

இவற்றை இனி தனிப்பட்ட சம்பவங்களாகப் புறக்கணிக்க முடியாது. இது நிர்வாகக் குறைபாடு, அலட்சியம் மற்றும் கடுமையான அழுத்தத்தில் உள்ள சிறைச்சாலை அமைப்பின் நேரடி விளைவாகும்.

இது இனி ஒரு தனிப்பட்ட சம்பவம் மட்டுமல்ல.

இது மோசமான நிர்வாகம், முறையான தலைமைத்துவமின்மை மற்றும் சீரழிய அனுமதிக்கப்பட்ட சிறைச்சாலை அமைப்பின் துயரத்தைப் பிரதிபலிக்கிறது.

இத்தகைய நெருக்கடியை நாம் எதிர்கொள்ளும் வேளையிலும், சிறைச்சாலைகள் திணைக்களம் ஒரு நிரந்தர சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் இல்லாமலேயே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இத்தகைய ஒரு முக்கியப் பதவிக்கு இதுவரை பொருத்தமான நபர் யாரும் நியமிக்கப்படவில்லை.”

கூடுதல் பாதுகாப்புப் படையினரை பணியில் அமர்த்துவது ஒரு நாளுக்கு நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தாலும், அது சிக்கலைத் தீர்க்காது.

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல், போதுமான வசதியின்மை, திருப்தியற்ற சுகாதார சேவைகள் மற்றும் அர்த்தமுள்ள மறுவாழ்வுத் திட்டங்களின் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு அவசர கவனம் தேவை.

சிறைவாசம் ஒருவரின் சுதந்திரத்தைப் பறிக்கிறது, ஆனால் அது அவரது கண்ணியத்தைப் பறிப்பதில்லை.

அமைப்பு ரீதியாக முற்றிலும் தோல்வியடைந்த சிறை அமைப்புக்கு தற்காலிகத் தீர்வுகளை வழங்குவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் மற்றும் அந்த அமைப்பைச் சீர்திருத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Leave a comment

Comment