மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் குறித்து உடனடியாக விசாரணை தொடங்கப்படும் என சிறைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.
இன்று (02) ஊடகங்களிடம் தனது கருத்துக்களைத் தெரிவித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
மஹர சிறைச்சாலையில் கைதிகளால் ஏற்படுத்தப்பட்ட சேதம் குறித்தும் அவர் விளக்கினார்.
அதன்படி, சிறைச்சாலை சமையலறை, புனர்வாழ்வுக் கட்டிடம், புனர்வாழ்வு அலுவலகம், பிரதான சிறைக்காவலர் அலுவலகம் மற்றும் சிறை மருத்துவமனை ஆகியவை சேதமாக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், கலவரத்திற்கான காரணம் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை என்றும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சிறைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க மேலும் தெரிவித்தார்.
நேற்று (01) பிற்பகல் மஹர சிறை வளாகத்தில் ஏற்பட்ட கலவரம் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன்படி, நிலைமை அமைதியாக இருக்க வேண்டும் என்றும், கைதிகளின் உறவினர்கள் அமைதியாக அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


