TamilsGuide

நீங்கள் மந்திரி பதவிக்கு ஆசைப்பட்டீர்களா?

கேள்வி: "நீங்கள் மந்திரி பதவிக்கு ஆசைப்பட்டீர்களா?'
#எம்ஜிஆர்: "அது நான் விரும்பாத பதவி. நான் விரும்பி இருந்தால், #அண்ணா காலத்திலேயே மந்திரி ஆகி இருப்பேன். மந்திரி பதவியை நான் ஏற்க மறுத்ததால்தான், மந்திரி பதவிக்குரிய அந்தஸ்து கொண்ட சிறுசேமிப்பு துணைத் தலைவர் பதவியை எனக்கு கொடுத்தார்"
கேள்வி: "உங்களுக்கு சேரும் கூட்டமெல்லாம் நீங்கள் பிரபல சினிமா நடிகர் என்பதால் இருக்கலாம அல்லவா?"
எம்ஜிஆர்: "நான் நடிகன், ஆனால் என்னைப்போல எத்தனையோ நடிகர்கள் உள்ளனர். இவர்கள் எல்லாம் என் போலவே இயக்கம் ஆரம்பித்தால் ஒவ்வொருவருக்கும் இப்படிக் கூட்டம் சேரும் என்று சொல்ல முடியுமா?"
கேள்வி: "12.1.1973 அன்று வேலுரில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் சிவாஜி கணேசன், அண்ணா தி.மு.க.வைச் சாக்கடை என்று ஏளனமாகப் பேசினார். அவருக்கு தாங்கள் கூறும் பதில் என்ன?"
எம்ஜிஆர்: "நான் படித்த ஏடுகளில் அப்படிப் பேசியதாக எந்தச் செய்தியும் தெரியவில்லை."
கேள்வி: "பிலிமாலயா பத்திரிகையில் சந்திரபாபு எழுதும் கதைக்குத் நீங்கள் ஏன் மறுப்புத் தெரிவிக்கவில்லை?"
எம்ஜிஆர்: "கதைக்குப் போய் யாராவது மறுப்பு தெரிவிப்பார்களா."
கேள்வி: "தங்களுக்கு அரசியல் தெரியாது என்று தமிழ்வாணனும் சிவாஜி கணேசனும் சொல்லி இருக்கிறார்கள். உங்கள் கருத்து என்ன?"

எம்ஜிஆர்: "கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு என்னைப் பொறுத்தவரையில் இது பொருந்தும் இதை நான் ஏற்றுக் கொள்கிறேன்."
கேள்வி: "உங்களது கட்சி நாளிதழில் சிவாஜி கணேசனைப் பற்றிய செய்திகள் வெளியிடப்படுகின்றனவே?"
எம்ஜிஆர்: "சிவாஜி கணேசன் எதிர்கட்சியிலிருந்து கொண்டு அண்ணாவின் தி.மு.கழகத்தை எதிர்த்துக் கொண்டிருந்த நேரத்தில் அமரர் அண்ணா அவர்கள் ஒரு நாள் சிவாஜி கணேசன் அவர்களின் நாடகத்திற்கு தலைமை தாங்கிப் பாராட்டியதை மறந்துவிட்டீர்களா?
எங்கிருந்தாலும் வாழ்க என்று அண்ணா வாழ்த்தவில்லையா? அவருடைய தம்பிகளான நாங்கள் அவரைப் பின்பற்றி நமது கடமையை நாம் செய்வோம்."
(அண்ணா நாளிதழ் 10.11.1976)
கேள்வி: புரட்சித் தலைவர் அவர்களே 1976-க்கு பிறகு தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசியலில் முழு மூச்சாக ஈடுபடுவீர்களா? அல்லது கலைத்துறையில் இருந்து பணியாற்றுவீர்களா?
எம்ஜிஆர்: உங்கள் தீர்ப்பும், சட்டத்தின் தீர்ப்பும் என்ன கட்டளை இடுகிறதோ அப்படி நடப்பேன்.
பல்வேறு நேரங்களில் #புரட்சித்தலைவர் எம்ஜியார் அவர்களிடம், நிருபர்கள் கேட்ட கேள்வியும், அவரின் பதிலும்.. 

Leave a comment

Comment