TamilsGuide

நம்பிக்கை குறைந்து வருகிறது - ஈரான் குறித்து டிரம்ப் கடும் விமர்சனம்

ஈரான் மீதான தனது நம்பிக்கை குறைந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றமான சூழ்நிலை தொடரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஸ்விட்சர்லாந்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் மீண்டும் மோதல் நிலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், ஈரான் தொடர்பில் கருத்து தெரிவித்த டிரம்ப், இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும், ஈரானிய அதிகாரிகள் தங்களது வாக்குறுதிகளை அடிக்கடி மீறுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

"ஈரான் குறித்து எனக்குள்ள நம்பிக்கை குறைந்து வருகிறது. அவர்கள் பொய் கூறுகின்றனர், தகவல்களை மாற்றிக் காட்டுகின்றனர்.

பேச்சுவார்த்தைக்கு உடன்படுகின்றனர், ஆனால் பின்னர் அதனை மீறுகின்றனர்" என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரான் தற்போது பலவீனமடைந்து வருவதாகவும், சில நேரங்களில் மீண்டும் வலிமை பெறலாம் என்றாலும், இறுதியில் மீண்டும் பலவீனமடைந்து மறைந்து போகும் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment