TamilsGuide

தங்கப்பதக்கம் வென்ற ருமேஷ் தரங்கவுக்கு ஜனாதிபதி வாழ்த்து

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ருமேஷ் தரங்கவிற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகப் பதிவு ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி, தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதன்படி, “கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நீங்கள் வென்ற தங்கப் பதக்கம், நமக்காக நனவாகும் நாட்டின் பொன்னான கனவாகும்” என்று கூறியுள்ளார்.

ருமேஷ் தரங்கவிற்கு வாழ்த்துகள்!

ஸ்காட்லாந்தின் ஸ்காட்ஸ்டவுன் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இன்று (01) முடிவடைந்த போட்டியில், ரூமேஷ் 89.75 மீட்டர் தூரம் எறிந்து தனது தங்கப் பதக்கத்தை வென்றார்.


 

Leave a comment

Comment