சூப்பர்ஸ்டார் ரஜினி தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் படத்தில் நடித்து வருகிறார். அதில் அவர் டாக்டர் ஆக நடிக்கிறார்.
நடிகை ராசி கண்ணா அந்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டபோது ரஜினி அவரிடம் பல விஷயங்கள் பேசினாராம். அப்போது ஆன்மீகம் பற்றிய பேச்சும் வந்திருக்கிறது.
Living with the Himalayan Masters என்ற புத்தகத்தை படித்து இருக்கிறாயா என கேட்டாராம் ரஜினி. இல்லை என்றதும் அந்த புத்தகத்தை கொண்டு வந்து தனது ஆட்டோகிராப் போட்டோ கிப்ட் ஆக ராசி கண்ணாவுக்கு கொடுத்து இருக்கிறார்.
அந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என சொன்ன அவர், அதை பற்றி கேள்விகளும் பின்னர் கேட்பேன் என சொன்னாராம். அதனால் ராசி கண்ணா அந்த புத்தகத்தை படித்து தியானம் மற்றும் ஆன்மீகம் பற்றி தற்போது அறிந்து வருகிறாராம். அதை அவரே வீடியோவில் தெரிவித்துள்ளார்.


