TamilsGuide

ஜனநாயகன் திரைப்படம் 9 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கிய நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படம் ஜனநாயகன். திரையுலகில் 33 ஆண்டுகளாக மக்களை மகிழ்வித்த விஜய், சினிமாவிலிருந்து விலகி அரசியலில் களமிறங்கினார். இதனால் பல பிரச்சனைகளையும் அவர் எதிர்கொண்டார்.

அரசியலில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக அவர் சினிமாவிலிருந்து விலகினார். இது அவருடைய ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்தது. இதனால், விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகனை திரையரங்குகளில் மாபெரும் அளவில் கொண்டாட வேண்டும் என முடிவு செய்தனர்.
    
கடந்த ஜூலை 23-ஆம் தேதி திரைக்கு வந்த ஜனநாயகன், ஒவ்வொரு திரையரங்கையும் திருவிழா கோலமாக மாற்றியது. மேலும், இது விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் பலரும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்கள். இவ்வளவு ஏன், இப்படத்தை திரையில் பார்த்த அமைச்சர்கள் கூட கண்கலங்கி அழுத வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியான ஜனநாயகன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து முதல் நாளிலிருந்தே பார்த்து வருகிறோம்.

இந்நிலையில், 9 நாட்களில் உலகளவில் ஜனநாயகன் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 9 நாட்களில் இப்படம் ரூ. 260 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
 

Leave a comment

Comment