எம்ஜிஆர் மக்கள் திலகமாகவும், சிவாஜி கணேசன் நடிகர் திலகமாகவும் கொண்டாடப்பட்ட காலத்தில் வில்லன் திலகம் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் எம்.என்.நம்பியார்.
எம்ஜிஆர் மக்கள் திலகமாகவும், சிவாஜி கணேசன் நடிகர் திலகமாகவும் கொண்டாடப்பட்ட காலத்தில் வில்லன் திலகம் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் எம்.என்.நம்பியார். ஒப்பீட்டளவில் இந்த வில்லன் பல ஹீரோக்களைவிட நல்லவர். சிறந்த ஐயப்ப பக்தர். திரையுலகில் பல ஜாம்பவான்களுக்கு குருசாமி.

இந்த மூன்று திலகங்களும் கடைசியாக கலந்து கொண்டது தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனின் ஜல்லிக்கட்டு படத்தின் 100 வது நாள் விழாவில்.
வியட்நாம் வீடு சுந்தரம் எழுதிய கதை ஜல்லிக்கட்டு. அதற்கு மணிவண்ணன் திரைக்கதை அமைத்து இயக்கினார். கொலை குற்றத்திற்காக சத்யராஜுக்கு சிறைத்தண்டனை விதிக்கும் நீதிபதி சிவாஜி, தனது ஓய்வுக்குப் பிறகு சிறைக்கைதி சத்யராஜை தனது தீவு பங்களாவில் வேலைக்காரனாக அமர்த்திக் கொள்ள அனுமதி பெறுவார்.

எலியும், பூனையுமாக இருக்கும் சிவாஜியும், சத்யராஜும் ஒருகட்டத்தில் நெருக்கமாவார்கள். கிரிமினல்களால் பாதிக்கப்பட்ட சிவாஜி சத்யராஜை வைத்து அவர்களை பழிவாங்குவார். சத்யராஜுக்கு தீங்கிழைத்தவர்களும் சிவாஜியிக்கு அநீதி செய்தவர்களும் ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். இறுதியில் சத்யராஜுக்காக சிவாஜி வாதாடி அவரை குற்றமற்றவர் என வெளியே கொண்டு வருவார்.

குற்றவாளியை நீதிபதியே காப்பாற்றும் கிளைமாக்ஸுக்கு தணிக்கைக்குழு மறுப்பு தெரிவிக்க, சிவாஜியும், சத்யராஜும் நீதிபதியிடம் சரணடைவதாக ஒரேயொரு காட்சியை கூடுதலாக இணைத்து தணிக்கைச் சான்றிதழ் பெற்றனர்.
குற்றவாளியை நீதிபதியே காப்பாற்றும் கிளைமாக்ஸுக்கு தணிக்கைக்குழு மறுப்பு தெரிவிக்க, சிவாஜியும், சத்யராஜும் நீதிபதியிடம் சரணடைவதாக ஒரேயொரு காட்சியை கூடுதலாக இணைத்து தணிக்கைச் சான்றிதழ் பெற்றனர்.
1985, ஆகஸ்ட் 28 ஆம் தேதி ஜல்லிக்கட்டு வெளியானது. நேற்றுடன் 35 வருடங்கள் முடிந்து இன்று 36 வது வருடம் தொடங்குகிறது. படம் நல்ல வவரவேற்புடன் 100 நாள்கள் ஓடியது. அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆரை வைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 100 வது நாள் வெற்றி விழாவை பிரமாண்டமாக கொண்டாடினார் சித்ரா லட்சுமணன். விழாவில் சிவாஜி, சத்யராஜ், நம்பியார், படத்தின் நாயகி ராதா உள்ளிட்ட படக்குழுவினருடன் கமல்ஹாசன், பாரதிராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்த விழா நடப்பதனால்தான் அன்பான முதல் அமைச்சர், கலையுலக மூத்தவரின் வாழ்த்துகளை இங்கே இளைய தலைமுறையினர் பெறுகின்ற வாய்ப்பு கிட்டியுள்ளது. என்னைத் தவிர இதில் நடித்துள்ள அனைவரும் இளைஞர்கள். முதல்வரின் வாழ்த்து இந்த இளைய தலைமுறையினர் உற்சாகத்துடன் தொடர்ந்து வழி நடக்க உதவும்" என சிவாஜி கணேசன் பேசினார்.
சத்யராஜ் பேசுகையில், வாய்ப்புத்தேடி சென்னையில் நடிகர் சிவகுமாருடன் தங்கியிருந்த நாள்களை நினைவுகூர்ந்தார். அத்துடன் சிவாஜி, எம்ஜிஆர் படங்களிலிருந்து அவர்கள் பேசிய வசனங்களைப் பேசி கைத்தட்டல் பெற்றார்
விழாவில் சாலமன் பாப்பையா, எழுத்தாளர் சிவசங்கரி போன்றோரும் கலந்து கொண்டனர். சிவசங்கரி பேசுகையில், "இன்று மேடையில் ஒரே நேரத்தில் சூரியன், சந்திரன் தோன்றியுள்ளன" என்றார்.
பாரதிராஜா பேசுகையில், சத்யராஜ் எப்படி நல்ல நடிகராக முடியும் என்று தப்புக்கணக்குப் போட்டிருந்தேன் என்றார். சிவாஜி, சத்யராஜ், நம்பியார், ராதாவுக்கு எம்ஜிஆரும், பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு பாரதிராஜாவும் கேடயங்கள் வழங்கினர். இதுதான் எம்ஜிஆர் கடைசியாக கலந்து கொண்ட திரைப்பட நிகழ்ச்சியாகும்.
Kalimuthu Raj