TamilsGuide

ஜூலை மாதத்தில் பணவீக்கம் 7.3 சதவீதமாக அதிகரிப்பு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் கணக்கிடப்பட்ட இலங்கையின் பிரதான பணவீக்க விகிதமானது, 2026 ஜூலை மாதத்தில் 7.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இது கடந்த ஜூன் மாதத்தில் 6.8 சதவீதமாக காணப்பட்டது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி, உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் 2026 ஜூன் மாதத்தில் 3.6 சதவீதமாக இருந்தது.

அது, 2026 ஜூலை மாதத்தில் 6.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதேவேளையில், உணவு அல்லாத பொருட்களுக்கான பணவீக்கம் 2026 ஜூன் மாதத்தில் 8.4 சதவீதமாகப் பதிவாகியிருந்தது.

அதில் 2026 ஜூலை மாதத்தில் 7.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.
 

Leave a comment

Comment