திருவருட்செல்வர்" படத்தில் அப்பா சிவாஜிக்கு மிக வயதான முதியவர் ( அப்பர் ) போன்ற வேடம். ஒருநாள் அந்த படப்பிடிப்பு முடிந்தது. ஆனால் அப்பா மேக்கப்பை கலைக்க வில்லை. அப்படியே வீட்டுக்கு புறப்பட்டார். வீட்டை அடைந்ததும் வாசலில் நின்றபடி குரலை மாற்றி ' அம்மா தாயே' என்று குரல் கொடுக்கிறார்.
வெளியே வருகிறார் பாட்டி இராஜாமணி அம்மாள்.
அவரிடம் ( சிவாஜி ) " நான் ஒரு சிவ பக்தன். கைலாய மலைக்கு போய் கொண்டு இருக்கிறேன். வழியில் கிடைப்பதை சாப்பிடுவேன். ஒரு வாய் சோறு கிடைக்குமா? என கேட்கிறார். பக்தி பரவசத்தில் ராஜாமணி அம்மாள், வந்திருப்பவர் தன் மகன் என்று அறியாமல், வீட்டிற்குள் அவரை அழைத்துச் சென்று உணவு கொடுத்து வணங்குகிறார். ¶
சாமியார் சாப்பிடும் விதத்தை பார்த்து
" நம்ப கணேசன் சாப்பிடுவதை போல இருக்கிறதே " என அவரை கூர்ந்து கவனிக்கிறார். ¶
எத்தனையோ முக பாவங்களை காட்டுபவர், அம்மாவின் முக மாறுதலை பார்த்து சத்தம் போட்டு சிரிக்கிறார். அந்த சிரிப்பை பார்த்து சாப்பிடுபவர் தன் மகன் தான் என பிரமிக்கிறார் இராஜாமணி அம்மாள். ¶
நடிப்பு திறமையால் பெற்ற தாயின் கண்களையே ஏமாற்றியவர் 'நடிகர் திலகம்' என்றார் பிரபு. ¶
நன்றி : இளையதிலகம் பிரபு ( 28/05/2021 ) - தினத்தந்தி. !!!


