புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட 104 மெட்ரோ பேருந்துகளை ஏற்றி வந்த கப்பல் ஒன்று நேற்று (30) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
2025-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளின் கீழ் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய நடவடிக்கையாக, நவீன, வசதியான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட பேருந்துகளை அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்பேருந்துகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் கொழும்பு நகரப் பகுதியில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.


