அடுத்த மூன்று மாதங்களுக்கு மழை பெய்யாவிட்டாலும் கூட, லபுகம மற்றும் களதுவாவ நீர்த்தேக்கங்களில் தற்போதுள்ள நீர் இருப்பு தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யப் போதுமானதாக உள்ளது என்று நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் பேசிய அமைச்சர்,
‘எல் நினோ’ (El Niño) சூழலால் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வறண்ட வானிலை நிலவும் என்று கணிக்கப்பட்டிருந்தாலும், நீர்த்தேக்கங்களின் தற்போதைய கொள்ளளவு தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானது என்பதை நீர் வழங்கல் வாரிய நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நீர் விநியோகக் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
அடுத்த இரண்டு மாதங்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது என்றும் அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
இருப்பினும், வானிலை மாற்றங்கள் சூழ்நிலையை மாற்றக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.


