TamilsGuide

ட்ரம்பின் சூளுரையால் காத்திருக்கும் சிக்கல் - தாக்குதல்களால் அதிரும் மத்திய கிழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் தங்களது சந்திப்பில், ஈரானின் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான ராஜதந்திரம், பொருளாதார அழுத்தம் மற்றும் படைபலம் உள்ளிட்ட அனைத்து வழிகளையும் ஆராய்ந்ததாக ஒரு மூத்த இஸ்ரேலிய அதிகாரி தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையில் இருவரும் சந்தித்த பிறகு, செய்தியாளர்களுடனான சந்திப்பில் அந்த அதிகாரி கூறும் போது, ஈரான் மீது தாக்குதல் நடத்துவதே இஸ்ரேலின் விருப்பம் என்பதை நெதன்யாகு ட்ரம்ப்பிடம் தெரிவிக்கவில்லை.

"ஒரு உடன்பாடு, முற்றுகை அல்லது பொருளாதார அழுத்தங்களை தொடர்வது, மற்றும் ஒரு மாபெரும் தாக்குதல் என டிரம்புக்கு மூன்று ஆப்ஷன்கள் இருந்தன. இறுதியில், அது அவருடைய முடிவுதான்," என்று ட்ரம்ப் குறித்து அந்த அதிகாரி கூறினார்.

அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் பொதுமக்களின் விரக்தியால் ஈரானின் மதகுரு ஆட்சியாளர்கள் கலக்கமடைந்துள்ளதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், ஆனால் உலக பொருளாதாரம் மற்றும் எண்ணெய் சந்தை மீதான தாக்கமும் கருத்தில் கொள்ளப்படுவதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

இந்த மாதம் இரண்டு வாரங்களாக அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சு தாக்குதல்களில் இஸ்ரேல் பங்கேற்கவில்லை. இந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக அமெரிக்க தளங்கள் மீது தெஹ்ரான் தாக்குதல் நடத்தியது. இருப்பினும், தாக்கப்பட்டால் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் தெஹ்ரானை எச்சரித்துள்ளது.

நேற்று, அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு துணை ராணுவ குழுக்கள் மீது தாக்குதல் நடத்தின. மேலும், தான் வான்வழி தாக்குதல்களை நிறுத்திய சில நாட்களுக்கு பிறகு அமெரிக்க படைகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய ஈரானை "நன்றாக அடித்து நொறுக்குவேன்" என்று ட்ரம்ப் சூளுரைத்தார்.

ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதும், ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும், நீரிணையை கூட்டாக நிர்வகிப்பது குறித்த ஓமானின் முன்மொழிவை நிராகரித்ததாகவும் ஈரான் நேற்றிரவு உறுதிப்படுத்தியது.
 

Leave a comment

Comment