TamilsGuide

4000 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள ராமாயணா திரைப்படத்தின் பிரம்மாண்ட டிரைலர்.. 

இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட திரைப்படம் ராமாயணா.

இரண்டு பாகங்களாக எடுக்கப்படும் நிலையில், தலா ஒரு பாகத்திற்கு ரூ. 2000 கோடி பட்ஜெட் என கூறப்படுகிறது. இரண்டு பாகங்களும் சேர்த்து ரூ. 4000 கோடி பட்ஜெட்டில் ஹாலிவுட் தரத்தில் ராமாயணா உருவாகி வருகிறது.

இப்படத்தை நிதேஷ் திவாரி இயக்க, ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். ஹான்ஸ் சிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கின்றனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல் பாகமும், அடுத்த ஆண்டு தீபாவளிக்கு இரண்டாம் பாகமும் வெளிவரவுள்ளது.

இந்நிலையில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ராமாயணா முதல் பாகத்தின் பிரம்மாண்ட டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. 

Leave a comment

Comment