TamilsGuide

இந்தியா, சீனா மீது 100 சதவீத வரி - டிரம்ப் அதிரடி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு , 100 சதவீத கூடுதல் வரியை விதிக்கும் முயற்சியில் டிரம்ப் இறங்கியிருக்கிறார்.

இது தொடர்பாக புதிய மசோதாவை அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்த புதிய மசோதா அமெரிக்க செனட் சபையின் நடைமுறை வாக்கெடுப்பில் நிறைவேறியிருக்கிறது.

அமெரிக்கா சென்ற உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி முன்னிலையில் கொண்டுவரப்பட்ட இந்த மசோதா அமெரிக்காவின் இரு கட்சிகளின் ஆதரவுடன் சட்டமாவதற்கான முதல் படியை எட்டியிருக்கிறது.
 

Leave a comment

Comment