TamilsGuide

தம்புள்ளை சந்தைக்கு வரும் மரக்கறி அளவு கணிசமாக வீழ்ச்சி!

தம்புள்ளை சந்தைக்கு வழங்கப்படும் மரக்கறிகளின் மொத்த விநியோகம் சுமார் 200,000 கிலோ கிராம் அளவு குறைந்துள்ளதாக, அங்குள்ள பிரத்யேகப் பொருளாதார மண்டலத்தின் வர்த்தகர் சங்கத் தலைவர் சி.ஏ. சிறிவர்தன தெரிவித்தார்.

கடுமையான வறட்சியால் பயிர்கள் அழிந்ததும், விவசாயிகளுக்குப் போதுமான உரம் கிடைக்காததுமே இதற்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தினமும் 6,00,000 கிலோ கிராமிற்கும் அதிகமான மரக்கறிகள் வந்துகொண்டிருந்த நிலையில், நேற்று (28) மொத்த விநியோகம் சுமார் 4,00,000 கிலோ கிராமிற்கு சரிந்ததாக அவர் தெரிவித்தார். 

மொத்த விற்பனை விலைகள் குறைந்துள்ள நிலையில், ஒரு கிலோகிராம் கறி மிளகாயின் அதிகபட்ச மொத்த விற்பனை விலை 500 முதல் 550 ரூபாய்க்கு இடைப்பட்டதாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். 

தம்புள்ளை சந்தையில் கிலோ கிராம் ஒன்றுக்கான நேற்றைய மொத்த விற்பனை விலைகள் பின்வருமாறு: 

கரட் ரூ. 230–250, கத்தரிக்காய் ரூ. 350, முருங்கைக்காய் ரூ. 150–200, பூசணிக்காய் ரூ. 115, வெண்டைக்காய் ரூ. 60–70, லீக்ஸ் ரூ. 200 மற்றும் பீர்க்கங்காய் ரூ. 170.
 

Leave a comment

Comment