TamilsGuide

6வது நாளில் குறைந்த ஜனநாயகன் வசூல்.. 

கடந்த வாரம் திரைக்கு வந்த ஜனநாயகன் திரைப்படத்தின் வசூல் குறித்து நாம் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். அந்த வகையில், 6 நாட்களில் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 6 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் ரூ. 234 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது முதல் நான்கு நாட்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவான வசூலாகும்.

முதல் நான்கு நாட்களில் மொத்தமாக ரூ. 210 கோடி வசூல் செய்திருந்தது. ஆனால், அதன்பின் அடுத்த இரண்டு நாட்களில் ரூ. 24 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இது கடந்த இரண்டு நாட்களில் ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஏற்பட்டுள்ள பாக்ஸ் ஆபிஸ் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இருப்பினும் வரும் நாட்களில் கண்டிப்பாக மீண்டும் வசூல் ஏறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஏ சான்றிதழ் மற்றும் லீக்கான திரைப்படத்திற்கு 6 நாட்களில் ரூ. 234 கோடி என்பது மாபெரும் வசூல் மற்றும் மிகப்பெரிய சாதனை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 
 

Leave a comment

Comment