இது ஒரு அனுபவ கட்டுரை...!
1970 ல் எனக்கு வயது 7. அந்த வருடம் முதல் இன்று வரை எனக்கு பழக்கமானவர் திரு. அருள்சவரிமுத்து, கிறிஸ்தவர். இப்போது இவர் வயது 70கு மேல் .
அப்போது என் தந்தை கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகில் ஒரு கிராமத்தில் மளிகை கடை வைத்ததார். எங்கள் தங்கம் படம் வந்த காலம் அது. அப்போது எனக்கு எம்ஜிஆர் பட பாட்டு புத்தகம் வாங்கி தருவார். தலைவரை பற்றி அதிகம் சொல்லி தருவார்.
1973ஆம் ஆண்டு இயக்குனர் ஸ்ரீதர் வீட்டில் சென்னையில் வேலை செய்தார் மாத சம்பளம் 70 ரூபாய்...
அப்போது இயக்குனர் ஸ்ரீதர் "அலைகள்" ,படம் கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தன், சந்திரகலா வை வைத்து படம் எடுத்து சரியாக ஓடவில்லை. பண கஷ்டம்..
அப்போதுதான் ஸ்ரீதர் எம்ஜிஆரை சந்தித்து தனது பண கஷடத்தை சொல்லி தனக்கு ஒரு படம் நடித்து தர வேண்டினார். அப்போது அவர் எம்ஜிஆரிடம் ஒரு கிராமத்து கதையை சொன்னார். அந்த கதையில் வேட்டி மடித்துக்கொண்டு ஏர் கலப்பை பிடிக்கும் பாத்திரம். தெலுங்கில் நாகேஸ்வராவ் நடித்த ஒரு படத்தின் ரீமேக்தான் " உரிமைக்குரல்" படம்...
1974 ல் தொடங்கப்பட்ட அந்த படத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒப்புக்கொண்டார். ஆனால் படம் எடுக்கும் இடம் , ஊர் எல்லாம் எம்ஜிஆர் .லதா,. நம்பியார் யாருக்கும் சொல்லவில்லை. அப்போது வீட்டில் வேலை பார்த்த என் நண்பர் இந்த அருள்சவரிக்கு ஸ்ரீதர் கூறினார்.
அதை ஒருநாள் விடுமுறையில் வந்த அருள் எங்கள் கிராமத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் படம் எடுக்கும் ஊர் மைசூருக்கும் 75 நாற்பது கிமீ தூரம் உள்ள " தலக்காடு: என்ற கிராமம் என்பதை எங்கள் ஊர் மக்களை மாதா கோவிலில் வைத்து சொன்னார்.
வீட்டு வேலைக்காரனுக்கு தெரிந்து எங்கோ இருக்கும் எங்கள் குட்டி கிராமத்துக்கு அன்று தெரியவைத்தவர்தான் இந்த அருள்..
இந்த படம் எடுக்கும் சமயம்தான் மக்கள் திலகம் எம்ஜிஆர், லதா, நம்பியார் எல்லாம் அங்கு சென்றதும் எனது பள்ளி நண்பர்கள் திரு அந்தோணி சாமி, திரு டேவிட், திரு பிரான்சிஸ். நான் நால்வரும் மூவரும் அதே ஆண்டு 1974 தலைவரின் வெறியர்கள் . அப்போது எங்களுக்கு வயது 11.
அப்போது 'MGR IS AN INTELLECTUAL MAN" என்ற தலைப்பில் "திரை உலகம்" ஆசிரியர் திரு துரைராஜ் தனது பத்திரிகையில் எழுதி வந்தார். அதை படித்துகொண்டு இருந்தபோது எம்ஜிஆர் அந்த தலக்காடு கிராமத்தில் படப்பிடிப்பில் இருந்த
தன்னை தேடி வந்த மதுரை திரு சாகுல் அமீது அவர்களிடம் செலவுக்கு 100 ரூபாய் கொடுத்த சம்பவம் எழுத பட்டிருந்தது
அப்படி எல்லாம் எங்களுக்கு எம்ஜிஆர் மீது ஒரு பற்றை ஏற்படுத்தி விட்டவர் இவரே... அதுமட்டுமா எல்லா படமும் எங்கே எடுக்கிறார்கள் என்பதை அவ்வப்போது கூறுவார்.
அப்படிதான் 1975 ஆம் ஆண்டு "இதயக்கனி" படம் ம்,மைசூரில் உள்ள குண்டுராவ் எஸ்டேட்டில் படம் எம்ஜிஆர் எடுத்தார். அந்த புலமைப்பித்தன் ஹிட் பாடல் " நீங்க நல்லா இருக்கோணும்.. நாடு முன்னேற"" பாடல் படம் எடுத்தபோது அங்கே ஷூட்டிங் சென்று அருள் பார்த்து வந்தார். அந்த கூட்டத்தில் அருள் கூட உண்டு.. எம்ஜிஆர் மேக்கப் உடன் வந்தபோது பக்கத்தில் உள்ள கிராம மக்கள் எல்லாம் வண்டி கட்டிக்கொண்டு வந்ததாக குறிப்பிட்டார் அப்போது திரு அருள் சவரி.
------------- கடந்த சில வருடங்களுக்கு முன் எங்கள் ஊருக்கு வந்தபோது சந்தித்தேன். காட்டில் விறகு வேட்டி அதில் கூடை பின்னி விற்கிறார்...
எம்ஜிஆர் நினைவுகள் பற்றி பேசினோம்.. விடை பெறும்போது... அவரிடம் கையில் 100 ரூபாய் கொடுத்தேன் செலவுக்கு
வாங்க மறுத்துவிட்டார்..
ஏன்? என்னாச்சு... வாங்கி கொள்ளுங்கள் என கட்டாயப்படுத்தினேன்.
" உழைத்து வாழ வேண்டும் - பிறர்
உழைப்பில் வாழ்ந்திடாதே" என்று தலைவர் நமக்கு பாடம் சொல்லி தந்ததை மறந்துவிட்டீர்கள் போல... என்று சைக்கிளில் விர் என்று சென்று விட்டார்.
எம்,ஜிஆர் பாடல் அவரை மட்டுமல்ல....
எங்கள் போன்ற பல உண்மையான ரசிகர் / தொண்டர்களை எந்த அளவுக்கு அவர் இறந்த பின்பும் நிலைத்து நிற்கிறது என்பதற்கு உதாரணம் ஒன்றா? இரண்டா??
Abdul Salam


