TamilsGuide

நடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் மொட்டைமாடி போட்டோஷூட்

நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்று வருபவர் நடிகை ரம்யா பாண்டியன். ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவர், ஆண் தேவதை, நண்பகல் நேரத்து மயக்கம், ராமே ஆண்டாளும் ராவண ஆண்டாளும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் அருள்வான் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகை ரம்யா பாண்டியனை பிரபலமாக்கிய விஷயங்களில் ஒன்று மொட்டை மாடி போட்டோஷூட். கிளாமர் லுக்கில் அவர் எடுத்துக்கொண்ட அந்த போட்டோஷூட் ரசிகர்களிடையே வைரலானது. இந்த நிலையில், தற்போது மீண்டும் மொட்டை மாடியில் கருப்பு மற்றும் வெள்ளை நிற சேலையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரம்யா பாண்டியன் பதிவிட்டுள்ளார். 
 

Leave a comment

Comment