TamilsGuide

நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை எனும் தொனிப்பொருளில் நடைபவனி

நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை’ எனும் தொனிப்பொருளில் மாவட்ட நடைபவனி நடைபெற்றது.

இன்று காலை 09.00 யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் ஆரம்பமானது.

இந்த ஊர்வலம் யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகி,  ஆஸ்பத்திரி வீதி வழியாக, வேம்படி வீதி வழியாக சென்று பிரதான வீதி வழியாக மாவட்ட செயலகத்தில் நிறைவு பெற்றது.

இலஞ்ச ஊழலை ஒழிக்கும் நோக்கில் மாறுவோம் மாற்றுவோம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி அமைதியான ஊர்வலமாக நடைபெற்றது.

தூய்மையான இலங்கை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த  லஞ்ச ஊழலை ஒழிக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நடைபவனியில் மாவட்டச் செயலகம், ஆளுந‌ர் செயலகம், மாகாண அமைச்சு, முப்படையினர்,  பிரதேச செயலகங்கள் உள்ளிட திணைக்களங்கள் பங்குபெற்றியிருந்தனர்.
 

Leave a comment

Comment