TamilsGuide

யானை தாக்கி இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

ஆனமடுவவின் தோணிகல பகுதியில் யானை தாக்கியதில் இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர், தோணிகலவைச் சேர்ந்த 68 வயதான எச்.எம். காமினி சத்துகுமார ஆவார்.

இவர் இன்று அதிகாலை (28) உயிரிழந்தார்.

ஒரு யானை தனது தோட்டத்திற்குள் நுழைந்ததை அறிந்த அவர், யானையை விரட்டுவதற்காக தனது வீட்டின் முன்பகுதிக்குச் சென்று அங்கேயே தங்கியிருந்தார்.

இருப்பினும், வீட்டுக்காரர் தங்கியிருந்த வீட்டின் முன்பகுதியிலிருந்து சுமார் 30 அடி தூரத்தில் இருந்த யானை, திடீரென வீட்டை நோக்கிப் பாய்ந்தது.

அந்த நேரத்தில், யானை அவரைத் தாக்கி, சுமார் 100 அடி தூரம் இழுத்துச் சென்று மிதித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

யானையின் தந்தங்களால் அவரது உடல் கடுமையாகக் காயமடைந்துள்ளதாக ஆனமடுவ , பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆனமடுவ பொலிஸார், மரணம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
 

Leave a comment

Comment