TamilsGuide

அமெரிக்க வரி விதிப்புக்கு கனடா பதிலடி

அமெரிக்கா விதித்துள்ள புதிய வர்த்தக வரிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், கனடியர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும், ஒட்டாவா நகர மண்டபத்தின் வெளிப்புறத்தில் பிரம்மாண்டமான கனடாக் கொடி பறக்கவிடப்படுகிறது.

இது குறித்து ஒட்டாவா நகர மேயர் மார்க் சட்க்ளிஃப் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த 18 மாதங்களில் கனடியர்களின் தேசப்பற்று வியக்கத்தக்க வகையில் அதிகரித்துள்ளது.

கனடா மற்றும் ஒட்டாவாவிலுள்ள பல வணிகங்களைப் பாதிக்கும் வகையில் அமெரிக்கா புதிய வரிகளை விதித்துள்ள நிலையில், நமது நகரும் நாடும் உறுதியாகவும் ஒற்றுமையாகவும் இருப்பதை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியம் என தெரிவித்துள்ளார்.

மேலும், நமது நாட்டின் மேப்பிள் இலைக் கொடியை பெருமையுடன் ஏற்றி, மிகவும் வலிமையான, சுதந்திரமான மற்றும் பொருளாதார ரீதியாக வலுவான நாட்டை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம் என அவர் வலியுறுத்தினார்.

மேரியன் தேவார் பிளாசாவை நோக்கியுள்ள நகர மண்டபப் பகுதியில் இந்த பிரம்மாண்டக் கொடி வழக்கமாக ஜூலை 1 'கனடா தினத்தில்' மட்டுமே ஏற்றப்படும்.

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள், ஹாக்கி மட்டைகள் மற்றும் சிமேந்து உள்ளிட்ட சில பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

கனடாவின் வர்த்தகக் கொள்கைகள் தங்களுக்குப் பாகுபாடாக இருப்பதாகக் கூறி இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது.  
 

Leave a comment

Comment