TamilsGuide

இலங்கை மெய்வல்லுநர் தெரிவுக் குழு உறுப்பினர்கள் இராஜினாமா

இலங்கை மெய்வல்லுனர் தெரிவுக் குழுவின் (Sri Lanka Athletics Selection Committee ) அனைத்து உறுப்பினர்களும் இன்று (27)  விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரிடம் கூட்டாகத் தமது பதவி விலகல் கடிதத்தை கையளித்து, பதவிகளிலிருந்து விலகியுள்ளனர். இலங்கைதேநீர்

பல்வேறு காரணங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த முடிவானது, அக்குழு முழுமையாகக் கலைக்கப்படுவதைக் குறிக்கிறது.

பதவி விலகிய இந்த குழுவில் விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் உதவிப் பணிப்பாளர் D.A. தயாரத்ன, முன்னாள் தேசிய மெய்வல்லுநர் வீரரும் சாதனையாளருமான கேணல் M.K.P. ஜயசேகர மற்றும்  அரச பாடசாலைகளுக்கு இடையிலான முன்னாள் மெய்வல்லுநர் சாதனையாளரான ரவி வித்யாலங்கார ஆகிய முன்னணி விளையாட்டு ஆளுமைகள் அங்கத்துவம் வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment