TamilsGuide

நிலாவெளி கடற்கரையில் சோகம் - டச்சு சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கி உயிரிழப்பு!

குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த 49 வயதுடைய டச்சு நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கடலில் நீச்சலில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக நேற்று (26) கிடைத்த தகவலைத் தொடர்ந்து, குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

உயிரிழந்தவர் நிலாவெளிப் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 49 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment