1975 ல் அலை ஓசை பத்திரிகையில் பணிபுரிந்தவர்
1976 ல் " உழைக்கும் கரங்கள் " படத்தில் பாடல் எழுதியவர் ..
ஒரு விழாவில் பேசினார் ..
" தலைவருக்கு பாடல் எழுதவேண்டும் என்றால் அதற்கு பொருத்தமான கவிஞர்களை எப்படி தலைவர் ஏற்பார் என்றால் .. நாம் நினைப்பதுபோல தலைவருக்கு பாடல் எழுதினால் எடுபடாது
அவர் நினைப்பதுபோல எழுதினால் எடுபடும் ": என்றார் ..
உதாரணமாக , : 1976 ல் வீனஸ் பிக்சர்ஸ் " ஊருக்கு உழைப்பவன் " படத்தில் ..
" பிள்ளைத்தமிழ் பாடுகிறேன் - ஒரு பிள்ளைக்காக
பாடுகிறேன்
மல்லிகைபோல் மனதில் வாழும் மழலைக்காக பாடுகிறேன் -- நான் பாடுகிறேன் " - என்ற ஜேசுதாஸ் பாடல் கவனியுங்கள் ..
கேட்பவர்கள் எல்லாம் வெளிபப்டையாக அந்த குழந்தைக்கு பாடல் உள்ளது போல இருக்கும்
ஆனால் குழந்தை மனம் கொண்ட நம் வள்ளல் அவர்களை புகழ்வது தான் உண்மை
உதாரணமாக அடுத்த வரியை பாருங்கள்
"மல்லிகைபோல் மனதில் வாழும் மழலைக்காக" பாடுகிறேன்
இதில் மல்லிகைபோல் மனதில் வாழ்வது குழந்தை மட்டுமல்ல தலைவரே ஒரு குழந்தைதானே ..நமக்கு ... அதுதான் அர்த்தமே ..
நேரிடையாக தலைவரை புகழ்ந்து அவரே பாடும் பாடல்
:1977 ல் ரிலீஸ் " இன்றுபோல் என்றும் வாழ்க " படம்
" இது நாட்டைக்காக்கும் கை -உன்
வீட்டைக்காக்கும் கை ..
இந்த கை நாட்டின் நம்பிக்கை
இது எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை "
இப்போது புரிகிறதே/// கவிஞர் முத்துலிங்கம் சொன்ன வார்த்தை
நாம் நினைப்பதுபோல தலைவர் படத்தில் எழுத முடியாது
தலைவர் நினைப்பதுபோல அறிந்து பாடல் எழுத தெரிந்தவர்களே எம்ஜிஆருக்கு எழுதமுடியும் என்பதற்கு சரியான சான்று ...இதுபோல நிறைய கூறலாம்.
--
Abdul Salam


