'தமிழக முதல்வர் விஜய் நடிக்கும் ..'என்று ஒரு படத்தின் டைட்டில் வருவது விஜய்க்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு; எம் ஜி ஆருக்குக் கூட கிடைக்காத வாய்ப்பு' என்று பலரும் வியக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல...???? ????
எம்.ஜி.ஆருக்கு அந்த வாய்ப்பு இரண்டு முறை கிடைத்தது . இரண்டு முறையும் அவர் பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்பதே நிஜம்..!
எம் ஜி.ஆர் முதன் முதலில் முதல்வர் ஆனது, 1977 ஜூன் முப்பது அன்று. . அவரது மீனவ நண்பன் படம் வெளி வந்தது , அதே வருடம் ஆகஸ்ட் பதினான்காம் தேதி. எம் ஜிஆர் நினைத்து இருந்தால் அந்த நாற்பத்தைந்து நாள் இடைவெளியில் , அந்தப் படத்தின் டைட்டிலில் 'தமிழக முதல்வர் எம் ஜி ஆர் நடிக்கும்..' என்று சேர்த்துப் போட்டுக் கொண்டு இருக்கலாம். ஆனால் அவர் அதை விரும்பவில்லை.
அதே போல அவர் தேர்தலில் வென்றபோது அவருக்கு மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படப்பிடிப்பு மிச்சம் இருந்தது. படத்தின் இயக்குனரும் அவரே.
பதவி ஏற்பதற்கு முன்பு இரவும் பகலுமாக இரண்டு நாள் ஷூட்டிங் நடத்தி படத்தை முடித்துக் கொடுத்து விட்டு முதல்வராக பதவி ஏற்றார்.
அந்தப் படம் வெளிவந்த போது எம்.ஜி.ஆர் முதல்வர் ஆகி ஆறு மாதம் பதினைந்து நாள் ஆகி இருந்தது. அவர் நினைத்து இருந்தால் அந்தப் படத்தில் கூட 'தமிழக முதல்வர் எம் ஜி ஆர் '' என்று போட்டுக் கொண்டிருக்க முடியும். அப்போதும் எம். ஜி.ஆர் அதை விரும்பவில்லை என்பதே உண்மை .
விமர்சனம் வந்து விடக்கூடாது என்பதற்காக
என்ற உணர்வு.!
எம். ஜி. ஆர். MGR தான்....!!
Syed Ansari


