ஜூலை மாதத்தின் முதல் 21 நாட்களில் இலங்கைக்கு 138,730 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
வெளியிடப்பட்டுள்ள புதிய தரவுகளின்படி, அந்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 31,734 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 23% ஆகும்.
அத்துடன், சீனாவிலிருந்து 8,484 பேரும், பிரித்தானியாவில் இருந்து 14,959 பேரும், நெதர்லாந்திலிருந்து 8,415 பேரும் இந்த காலப்பகுதியில் இலங்கைக்கு வந்துள்ளனர்.
மேலும், 2026 ஜனவரி 01 முதல் ஜூலை 15 வரை மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 1,285,303 ஆகப் பதிவாகியுள்ளது.
அவர்களில் இந்தியாவிலிருந்து 325,417 பேரும், பிரித்தானியாவில் இருந்து 123,526 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளதாக அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
மேலும் கண்டறிக
இதற்கிடையில், இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் சுற்றுலாத்துறை மூலம் நாட்டிற்கு கிடைத்த வருமானம் 475.6 பில்லியன் ரூபாயாகும்.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் சுற்றுலாத்துறை வருமானமாக 50.5 பில்லியன் ரூபாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.


