TamilsGuide

அவமானங்கள் இல்லாமல் வெற்றி கிடையாது - நடிகை பூஜா ஹெக்டேவின் வெளிப்படையான பேச்சு

கோலிவுட் முதல் பாலிவுட் வரை முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வசூல் வேட்டையாடி வருகிறது ஜனநாயகன். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இதற்கு முன் பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயகனை தொடர்ந்து காஞ்சனா 4 தமிழில் வெளிவரவுள்ளது. மேலும் தெலுங்கில் ஸ்ரீ ஸ்ரீ எங்கும் திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த நிலையில், சமீபத்திய ஒன்றில் பேசிய நடிகை பூஜா ஹெக்டே, "சினிமா என்பது புதைமணல் போன்றது, கவனமாக இல்லாவிட்டால் அதில் சிக்கிக்கொண்டு சிதைந்து போய்விடலாம். அதனால் போட்டி இருந்தாலும் பொறாமை இல்லாமல் பயணிக்க வேண்டும்" என கூறினார்.

மேலும், "சினிமாவில் உழைப்பும் நம்பிக்கையும் இருந்தால்தான் முன்னேற முடியும். இன்று சாதித்திருக்கும் அனைவரும் பல அவமானங்களையும் தோல்விகளையும் கடந்துதான் வந்திருக்கிறார்கள். இங்கே அவமானங்கள் இல்லாமல் வெற்றி கிடையாது" என பூஜா தெரிவித்தார்.

நடிகை பூஜா ஹெக்டேவின் இந்த பேச்சு தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
 

Leave a comment

Comment