கடுவெலயின் பொமிரியா பகுதியில் சரக்குந்துகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த காலாவதியான உர இருப்பை நுகர்வோர் விவகார அதிகாரசபை பறிமுதல் செய்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை இணைந்து நடத்திய சிறப்பு சோதனையின் போது இந்த உர இருப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
அதிகாரிகள் 376 கிலோகிராம் காலாவதியான திட உரத்தையும், 1,170 லிட்டர் திரவ உரத்தையும் கண்டுபிடித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட உர இருப்பு தற்போது முத்திரையிடப்பட்டு, இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
விசாரணை முடிந்த பின்னர், மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தின் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


