ருமேனியாவின் வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்த, ரஷ்யாவினுடையது என சந்தேகிக்கப்படும் ஒரு ஆளில்லா வானூர்தியை, ருமேனியப் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தியுள்ளது.
யுக்ரைன்; மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு ஆரம்பித்ததில் இருந்து, ஊடுருவிய ஒரு ஆளில்லா விமானத்தை, இந்த கிழக்கு ஐரோப்பிய நாடு இடைமறித்தது இதுவே முதல் முறை என்று நாட்டின் ஜனாதிபதி நிகுசர் டான் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவும் யுக்ரைனும் தினமும் நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானத்தை ஏவி வரும் நிலையில், குறித்த ஆளில்லா வானூர்தியை, ருமேனிய போர் விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளது.


