TamilsGuide

குவைத்திற்கான சேவையை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, குவைத்திற்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது. இலங்கைசட்ட ஆலோசனை

இதன்படி, நேற்று (20) முதல் 2026 ஜூலை 26 வரை குவைத்திற்கான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

மேலதிக தகவல்கள் அல்லது உதவிகள் தேவைப்படும் பயணிகள், 1979 (இலங்கைக்குள்), +94 11 777 1979 (சர்வதேச அளவில்) அல்லது WhatsApp எண் +94 74 444 1979 (செய்தி பரிமாற்றத்திற்கு மட்டும்) ஆகியவற்றின் ஊடாக விமான நிறுவனத்தைத் தொடர்புகொள்ளலாம்.

அல்லது தங்கள் பயண முகவரை அணுகலாம் அல்லது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.
 

Leave a comment

Comment