TamilsGuide

ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து - 5 பேர் உயிரிழப்பு

கட்டுவான தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தலைக்கவசம் (Helmet) உற்பத்தி தொழிற்சாலையில் இன்று (21) ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அதேவேளை, உள்ளே சிக்கியிருக்கக்கூடியவர்களை மீட்கும் பணிகளும் தொடர்ந்துவருகின்றன.

சம்பவம் இடம்பெற்ற வேளையில் தொழிற்சாலைக்குள் 80-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

அவர்களில் எவரேனும் இன்னும் கட்டடத்திற்குள் சிக்கியுள்ளனரா என்பதை உறுதிப்படுத்த தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தீக்கிரையாகிய தொழிற்சாலையிலிருந்து இதுவரை ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
 

Leave a comment

Comment